BREAKING NEWS

Jun 14, 2013

பரகஹதெனிய தேசிய பாடசாலை மாணவன் வைத்திய சாலையில்

பரகஹதெனிய தேசிய பாடசாலையில் உயர்தரம் வர்த்தகப்பிரிவில் கல்வி பயிலும் எம்.டீ.எம். சகி லத்தீப் மாணவன் அதே வகுப்பை சேர்ந்த இன்னும் சில மாணவர்களால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்

கடந்த புதன்கிழமை (05.06.2013) அன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள குறித்த மாணவன் தற்போது குருணாகல் பெரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருக்கும் உயர்தர பரீட்சையில் தேற்றமுடியாமா என்ற நிலை அம்மாணவனுக்கு ஏற்பட்டுள்ளது.

சம்பவ தினம் புதன்கிழமை (05.06.2013) வழமை போன்று காலை 6.20க்கு இப்பா கமுவயில் உள்ள தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு புறப்பட்டிருக்கிறார். 7.30 அளவில் பாடசாலைக்குள் நுளைந்து தனது வகுப்பறைக்கு சென்றிருக்கிறார். பரீட்சைக்காக வகுப்பு தயார் நிலையில் இருக்க. தனது நண்பர்கள் ஒரு சிலரை தவிர வேறு எவரும் வகுப்புக்குள் இருந்ததாக தெரியவில்லை என சம்பவத்தை விபரிக்கிறார் சகி.

”நான் வகுப்புக்குள் இருந்தேன். என்னை தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதை நண்பர் ஒருவர் இரகசியமாக தெரிவித்தார். என்னால் வெளியில்செல்ல முடிய வில்லை. அதிபரோ ஆசிரியரோ எமது வகுப்பறை பக்கமாக வந்தால் விடயத்தை தெரியப்படுத்தலாம் என்றிருந்தேன்.

இப்படி எவரும் இந்த பக்கம் வரவில்லை. அப்போது வகுப்புக்கு நுளைந்த எமது வகுப்பைச் சேர்ந்தவர்கள் உடனே என்னை தாக்கினார்கள். முதுகு, தலை, கை, கால் என எல்லா இடத்திலும் அடிக்க நான் மயக்கமுற்று கீழே விழுந்துவிட்டேன். அதற்கு பிறகு சில நிமிடங்கள் எனக்கு என்ன நடந்தது என்பதை என்னால் உணர முடியவில்லை.

மீண்டும் எனக்கு தண்ணீர் உற்றுவதுபோல் இருக்க, மயக்கம் ஓரளவு தெளிந்தது. அதன்போது ‘இவன் மயங்கியது போல் நடிக்கிறான்டா’ எனக்கூறி மீண்டும் அடித்தார்கள். எனது தலையை பிடித்து மேசையில் அடித்தார்கள். அப்போது, ‘இவனை வேறு இடத்துக்கு கொண்டுபோய் அடிப்போம்’, ‘எனக்கும் அடிப்பதற்கு வாய்ப்பு தா’ என்றெல்லாம் அவர்கள் கூறியது எனக்கு தெரிந்தது. பின்னர் நான் மீண்டும் மயங்கிவிட்டேன்.

அதற்கு பிறகு என்னை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றது தான் நினைவில் இருக்கிறது என பெருமூச்சு விடுகிறார் சக்கி.

மாவத்துகம வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்டவர். அங்கிருந்து சிகிச்சைகளுக்காக குருணாகல் பெரிய வைத்திய சாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்தும் இந்த கட்டுரை எழுதப்படும் வரை (12.06.2013) குறித்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தற்போது சகி லத்தீபுக்கு 18 வயதாகின்றது. ஐந்து வருடங்களுக்கு முன்னர் தனது தாயை இழந்த அவருக்கு 13 வயதுடைய ஒரு சகோதரியும் இருக்கிறார். தந்தை மறுமனம் செய்துள்ள நிலையில் அவருக்கு இன்னுமொரு மகனும் இருக்கின்றது. சகி தந்தையின் சகோதரியினாலேயே (மாமி) பராமரிக்கப்பட்டு வருகின்றார்.

சகி லத்தீபிற்கு பலமாக தலையில் தக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் முன்னானின் நரம்பு விலகியிருப்பதாக வைத்திய பரிசோதனை தெரிவிக்கின்றது. இதனால் வலிப்பு ஏற்படுகிறது. இந்த சம்பவத்துக்கு அவருக்கு வலிப்பு நோய் இருக்கவில்லை. எனினும் இந்த சம்பவத்திற்கு பின்னர் இதுவரை ஐந்து தடைவைகள் வலிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் அவர் தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு வைத்தியம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சகியின் பாதுகாவலர்கள் சம்பவ தினத்தன்று மாவத்துகம பொலிஸில் சம்பவம் தொடர்பில் முறையிட்டுள்ளனர். பாடசாலையில் இப்பாகமுவவைச் சொந்த இடமாக கொண்ட சகி லத்திப் பாடசாலையில் அமைதியான மாணவனாகவும் ஒழுக்கமிக்க மாணவனாகவும் இருந்து வருகிறார். அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இதுவரை எந்த முறைப்பாடும் பாடசாலை ஒழுக்காற்று குழுவிற்கு தெரிவிக்கப்பட்டதில்லை என அந்த குழு ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

அத்தோடு சகி பேச்சி திறமை மிக்கவர். பாடசாலை மற்றும் வெளிக்கள பேச்சு, விவாதப்போட்டிகளில் கலந்துகொள்வார். குருணாகல் மாவட்ட மாணவர் பாராளு மன்றத்திலும் உறுப்பினராக பாடசாலை தெரிவு செய்தது. அத்தோடு வடமேல் மாகாண நிகழ்வொன்றின் போது தமிழ் மொழி அறிவிப்பாளராக இவரை பாசாலை தெரிவு செய்து அனுப்பியதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பாடசாலையில் வெளியிடத்து மாணவன் ஒருவனுக்கு முக்கியத்துவமிக்கவனாக இருப்பதானது சிலருக்கு பிடிக்காமையினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்கிறார் சகி.

விடயம் தொடர்பில் அதிபரை தொடர்புகொண்ட போது சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் பொலிஸில் முறையிட்டுள்ளதாகவும் மாணவன் வைத்தியசாலையில் இருப்பதாகவும் அதிபர் தெரிவித்தார். ஏற்கனவே சகி லத்தீபுக்கு பாடசாலையில் சில அசாதாரண சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

நான் உயர்தரம் கற்பதற்காக பரகஹதெனிய தேசிய பாடசாலையை தெரிவு செய்தேன். பாடசாலைக்கு சேர்தத முதல் எனக்கு அங்கு பகிடிவதைகள் இடம்பெற்றன. ஆனால், அதனை நான் கண்டுகெள்ளவில்லை. ஏனெனில், இவை மாணவர்களிடத்தில் சாதாரணமாக இடம்பெரும் விடயமாக இருப்பதாக கருதினேன்.

எமது வகுப்பினர் என்னோடு சகஜமாகவே பழகினர். சிரேஷ்ட மாணவர்களே எனக்கு இவ்வாறு செய்தார்கள். இருப்பினும் காலப்போக்கில் அதுவும் குறைந்து சென்றன. ஆனால், கடந்த சில மாதங்களாகவே எனது வகுப்பைச் சேர்ந்த சிலரால் நான் துன்புறுத்தப்பட்டேன்.

அத்துடன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் என்னை தெலைபேசியில் தொடர்புகொண்ட எனது வகுப்பைச் சேர்ந்த ஒருவர், ‘நீ பாடசாலைக்கு வராதே. மீறிவந்தால், உன்னை கொலை செய்வேன்’ என மிரட்டினார்.

இதனை நான் அதிபருக்கு தெரியப்படுத்தினேன். எனது வீட்டார் விடயத்தை அறிந்து என்னை பாடசாலைக்கு அனுப்ப விரும்பவில்லை. இதனால் நீண்ட நாட்களாக பாடசாலைக்கு செல்லவும் இல்லை. இருப்பினும் அதிபர் எனக்கு சரியான பாதுகாப்பு தருவதாக உறுதியளித்த பின்னர் நான் பாடசாலைக்கு சென்றேன்’’ என்றார் சகி.
பகிடிவதைக்கும் பலிவாங்களும் மாணவர்களிடமிருந்து கலைக்கப்பட வேண்டிய ஒரு விடயமாக இருக்கின்றது. சகி லத்தீபின் நிலைமை எந்த பாடசாலைகளிலும் எந்தவொரு மாணவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாதென்பதே எல்லோரினதும் அவாவாகும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &