BREAKING NEWS

Jun 14, 2013

2028ஆம் ஆண்டு இந்தியா சீனாவை முந்தும்... ஜனத் தொகையில்...

உலகின் அதிக ஜனத்தொகை கொண்ட முதல் நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது


2028ஆம் ஆண்டு வாக்கில் சீனாவை விஞ்சி உலகின் அதிக ஜனத்தொகை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஐநா வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

அந்த சமயத்தில் இந்தியா சீனா ஆகிய இரண்டு நாடுகளின் ஜனத்தொகையும் நூற்று 45 கோடியாக இருக்கும் என்று அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

போகப்போக சீனாவின் ஜனத்தொகை மெதுவாக குறைந்துகொண்டு வரும் ஆனால் இந்தியாவின் ஜனத்தொகையானது 2050ஆம் ஆண்டுவரை அதிகரித்துக்கொண்டே போகும் என இந்த அறிக்கை கணித்துள்ளது.

தற்போது 700 கோடியாகவுள்ள உலகின் ஜனத்தொகை 2050ஆம் ஆண்டுவாக்கில் 940 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பெரும்பான்மையான ஜனத்தொகை அதிகரிப்புக்கு வளர்ந்துவரும் நாடுகளே காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஏற்கனவே கணிக்கப்பட்ட ஜனத்தொகை அதிகரிப்புகளை அதிகமான பெருக்கம் ஏற்படும் என்று தற்போது கணிக்கப்படுகிறது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &