BREAKING NEWS

Jun 14, 2013

தம்புள்ள பள்ளிவாசல் வேறிடத்திற்கு


தம்புள்ள பள்ளிவாசலை வேறிடத்திற்கு மாற்றுவதற்கு தயாராகவிருப்பதாக தெரிவித்த தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாக சபையின் உபசெயலாளர் ரவூப் ஆனால் முஸ்லிம்கள் வாழும் பகுதியிலேயே பள்ளிவாசல் அமையப்பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் ஸ்கைப் மூலமாக தொடர்புகொண்ட அவர் மேலும் கூறியதாவது,

மாத்தளை மேயர் ஹில்மி கரீம் தம்புள்ள பள்ளிவாசலை மாற்றிடத்தில் அமைப்பதற்கு தயாரென குறிப்பிட்டுள்ளார். நாங்களும் அதனை விரும்புகிறோம். ஆனால் பள்ளிவாசல் முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்திலயே அமைக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் வாழாத பகுதியில் பள்ளிவாசலை அமைப்பதில் பயன் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &