
இந்தியா: ஒடிசாவில் மனைவியைக் கொன்று , உடலை 300 துண்டங்களாக வெட்டி அழிக்க முற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
ராணுவத்தில் மருத்துவராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் ஒடிசாவைச் சேர்ந்த 71 வயதான சோம்நாத் பரிடா. இவரது மனைவிக்கு 62 வயது. இவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.
நேற்று, பரிடாவின் மைத்துனர் தன் சகோதரியை பார்க்க வந்த போது, அவரை வீட்டிற்கு உள்ளே விட மறுத்துள்ளார் பரிடா. இதனால் சந்தேகமடைந்த பரிடாவின் மைத்துனர், வீட்டில் பிண்வாடை வீசுவதாக போலீசில் புகார் செய்துள்ளார்.
அவரின் புகாரின் பேரில், பரிடாவின் வீட்டை சோதனையிட்ட போலீசார் அதிர்ந்து விட்டனர். காரணம் பரிடா தனது மனைவியைக் கொலை செய்து, உடலை சுமார் 300 சிறு துண்டங்களாக வெட்டி மறைத்து வைத்திருந்தார்.
பரிடா, தன் மனைவியைக் கொலை செய்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
India: A 71-year-old Retired Army doctor, Somnath Parida, in Odisha was arrested on Friday for allegedly murdering his 62-year-old wife. He had allegedly cut her into 300 pieces and was trying to dispose her in parts.