துபாய் நாட்டு வாடகை வண்டி ஓட்டுநர் (taxi driver) 200,000 திர்ஹம் பணத்தினையும் 1 மில்லியன் பெறுமதியான நகையினையும் தனது வண்டியில் கண்டெடுத்துள்ளார். பின்னர் அது தனக்கு உரியதல்ல என்பதால் அதனை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
"இது ஒருவர் தனது கடின உழைப்பால் சம்பாதித்திருக்கலாம் என எண்ணினேன்" என 31 வயதான பங்களாதேஷ் நாட்டைச்சேர்ந்த அப்துல் ஹலீம் தெரிவித்தார்.எகிப்து நாட்டைச்சேர்ந்த வியாபாரிகள் இருவர் ஜுமைராஹ் லேக் இலுள்ள அல்-மாஸ் டவேர்ஸ் இலிருந்து அவரது வாகனத்தில் ஏறும்போது தங்களது இரு சிறிய பொதிகளை பின்புற பயண மூட்டை வைப்பிடத்தில் (boot) வைத்துள்ளனர்.
"பிற்பகல் 4.30 மணிக்கு நான் எனது வேலையினை முடித்து வாகனத்தை துப்புரவு செய்யும்போது அந்த இரு பைகளும் இருக்கக்கண்டேன்" படத்திலுள்ள ஹலீம் அன்றைய நாளை நினைவு கூர்ந்தார்."ஆவலுடன் அந்த இரண்டில் ஒரு பையை திறந்தேன், அதில் 500 திர்ஹம் தாள்கள் கொண்ட கட்டுகள் இருந்தன".வாகன, போக்குவத்து அதிகார சபையில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை செய்யும் ஹலீம்,பெறுமதியான அந்த பொதியை ஒப்படைப்பதற்காக வேண்டி உடனடியாக நாயிப் (naif) போலீஸ் நிலையத்தை நோக்கி செல்லலானார்.
"துபாய் நாட்டு வாடகை வண்டி சட்டத்தின்படி ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவேண்டும்" என அவர் கூறினார். தனது பொருட்களை தொலைத்திருந்த பயணி மிகவும் கவலையுடன் அங்கு சென்றிருந்தார். கணக்காளரின் உதவியாளராக பணியாற்றும் இந்த பயணி, சாரதியைக் கண்டதுமே தந்து ஞாபகத்தை வரவழைத்ததுதான் தாமதம், உடனே தந்து பொக்கிஷம் கிடைத்தை இட்டு குதூகலமடைந்து ஆனந்தமாக சிரித்தார்.
அது அவரை பைத்தியத்தில் ஆக்கியது எனலாம்.அவர் நடனமாடினார்.சிறுபிள்ளைத்தனமாக போலீஸ் நிலையத்தின் முன்பாக "குதூகலித்தார். அவர் மிகவும் சந்தோஷத்துடன் பல வழிகளில் எனக்கு நன்றி செலுத்தினார்" என்று அந்த சாரதி ஹலீம் தெரிவித்தார். ஹலீமின் இந்த நேர்மையான பண்பு இனங்கானப்பட்டு சன்மானமளிக்கப்பட்டது.துபாய் வாடகை வண்டி நிறுவனத்தால் இவரை பாராட்டுமுகமாக பொருளாதாரரீதியாக சான்றிதல் வழங்கப்பட்டது.மேலும் வாகன, போக்குவத்து அதிகார சபையின் (RTA) மத்தார் அல் தய்யாரினால் தனிப்பட்டரீதியாகவும் போற்றப்பட்டு வெகுமதியளிக்கப்பட்ட்து.
மற்றைய அரச நிறுவனங்களாலும் ஹலீமின் செயல் போற்றப்பட்டதுடன், அவரது பெயர் துபாய் தனிச்சிறப்பு வாய்ந்தோரின் பட்டியலிலும் இடம்பெற்றது.
"நேர்மையாக இரு" என்பது மற்ற சாரதிகளுக்கு இந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை கூறும் சுருக்கமான அறிவுரையாகும்."பிறகு மற்ற அனைத்து நலவுகளும் நிகழும், என்னைப்பாருங்கள், நான் பொதியை ஒப்படைத்தேன் போற்றப்பட்டேன்" எனக்குறிப்பிட்டார்.
"நாங்கள் அவரைக்கொண்டு பெருமை அடைகிறோம். ஒரு வாடகை வண்டி ஓட்டுனரின் இவ்வாறான நாளாந்த நிகழ்வுகள் நிகழ பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்" என துபாய் வாடகை வண்டி சங்கத்தின் உதவி பணிப்பாளர் மர்வான் உதுமான் அப்துல் காதர் தெரிவித்தார்.மக்கள் பெறுமதிவாய்ந்தவையய் மட்டுமல்ல விட்டு செல்கிறார்கள்."ஒரு முறை ஒரு பெரிய குடும்பம் தங்களது குழந்தையையே தவறுதலாக விட்டு சென்றனர்" எனவும் செப்பினார்.