BREAKING NEWS

Jun 1, 2013

அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள்

அமெரிக்காவின் அரிசோனா மாவட்ட தலைநகர் பீனிக்ஸ் அருகேயுள்ள பாலைவனப்பகுதியில் 2 விமானங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

 ‘டீர் வேல்லி’ விமான நிலையத்தில் இருந்து மேற்கு-வடமேற்கு வான் எல்லையில் 15 மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இந்த விபத்தில் ஒற்றை என்ஜினுடன் பறந்த 2 சிறிய விமானங்களும் தீப்பிடித்து எரிந்ததாகவும், விபத்தில் சிக்கி 3 பேர் பலியானதாகவும் இருவர் படுகாயமடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.

 விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் தீப்பிழம்பாக மாறி பாலைவனத்தில் விழுந்து சிதறியதாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &