BREAKING NEWS

May 17, 2013

SURESH RAINAவுடன் நெருங்கிப் பழகும் ஸ்ருதி ஹாசன்

கிரிக்கெட் வீரர் ரெய்னாவும், நடிகை ஸ்ருதிஹாசனும் நெருங்கி பழகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின்பு தனுஷுடன் இணைந்து 3 என்கிற படத்தில் மட்டும் நடித்தார். இந்தப் படம் சரியாக போகாததால் அவருக்கு தமிழில் மேலும் வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனை பற்றி புதிது புதிதான கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கெனவே தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் இணைந்து பேசப்பட்ட இவர், தற்போது கிரிக்கெட் வீர்ர் ரெய்னாவுடன் கிசுகிசுக்கப்படுகிறார்.

அதாவது கிரிக்கெட் வீரர் ரெய்னாவும் ஸ்ருதியும் நெருங்கி பழகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ரெய்னா அண்மையில் சன்ரைசஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 99 ஓட்டங்களைப் பெற்றார்.

அந்த போட்டியை ஸ்ருதிஹாசனும் நேரில் பார்த்து ரெயினாவை உற்சாகப்படுத்தினார். அதோடு இருவரும் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றாக விருந்து சாப்பிடுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &