BREAKING NEWS

May 10, 2013

மு. மாகாண சபை உறுப்பினர் களுக்கும் தீர்வையற்ற வாகனங்கள்


முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரைவ அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், இரண்டரை வருடங்களுக்கு மேல் மாகாண சபை உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.
முன்னர், இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்யும் மாகாண சபை உறுப்பிர்கள் மாத்திரமே தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.
இதேவேளை, நாடாளுமன் உறுப்பினர் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை தீர்வையற்ற வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக 50,000 அமெரிக்க டொல் கடன்களும் வழங்கியுள்ளது.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்வையற்ற வாகனங்களை 120 – 150 மில்லியன் ரூபா பெறுமதிக்கு விற்பனை செய்வர். இந்த வாகனங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விற்பனை செய்வதற்கான அனுமதியை அண்மையில் அரசாங்கம் வழங்கியிருந்தது.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &