BREAKING NEWS

May 17, 2013

ஓய்வு பெறும் கால்பந்து ஜாம்பவான்!


புகழ்பெற்ற முன்னாள் இங்கிலாந்து கால்பந்து விளையாட்டுக் குழுவின் தலைவர், டேவிட் பெக்கம், ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வந்துள்ளன.
மான்செஸ்டர் யுனைடட் கிளப்புக்காக ஆடிய தனது கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கிய டேவிட் பெக்கம், பல பதக்கங்களை வென்றுள்ளார்.
38 வயதான இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கால்பந்துப் போட்டிகளின் உயர் மட்டங்களில் விளையாடியிருக்கிறார்.
இவர் இதன் பின்னர் ரியல் மாட்ரிட், எல்.ஏ.கேலக்ஸி, ஏ.சி.மிலன் மற்றும் மிகச்சமீபமாக பாரிஸ் செண்ட் ஜெர்மேன் போன்ற கிளப்புகளுக்காக ஆடியிருக்கிறார்.
தனக்கு மிகப்பெரிய பெருமையைத் தரும் விஷயமாக, இங்கிலாந்துக்காக ஆடியதையும், நாட்டை கால்பந்து விளையாட்டுக்கு வெளியேயும் பிரதிநிதித்துவப்படுத்தியதையுமே கருதுவதாக அவர் கூறினார். இதுவே ஓய்வு பெறுவதற்கு சரியான தருணம் என்றும் அவர் கூறினார்.
david-beckham
Bec_M_1729634a
Bec2_1729635a
Bottle_M_1729726a
Ham_Shirts_1729736a

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &