BREAKING NEWS

May 17, 2013

4வது தடவை தோற்றினாலும் பல்கலைக் கழக அனுமதி

University Grants Commission_0
2011 ஆம் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் மூன்றாவது தடவையாக தோற்றிய அனைத்து பரீட்சாத்திகளும் நான்காவது தடவையாக இம்முறை உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்தில் அனுமதி பெறுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நான்காவது தடவையாக உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள பரீ்ட்சாத்திகள் இம்மாதம் 20ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் க்ஷனிக்கா ஹிரிம்புரேகம கூறியுள்ளார்.

வழமையாக உயர்தரப் பரீட்சையில் மூன்றாவது தடவையாக தோற்றிய மாணவர்களுக்கே பல்கலைக்கழக அனுமதிக்கான இறுதி சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு மூன்றாவது தடவையாக உயர்தர பரீட்சையில் தோற்றிய பரீட்சாத்திகள் இம்முறை பரீட்சையில் தோற்றுவதற்கான விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து பரீட்சைகள் திணைக்களத்தில் கையளிக்க வேண்டும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்ளை பொறுப்பேற்பதற்காக பரீட்சைகள் திணைக்களத்தில் பிரத்தியேக கருமப்பீடமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &