BREAKING NEWS

May 17, 2013

விபச்சாரியாக ஸ்ருதி

தந்தை தனது நடிப்புக்காக எவ்வளவுதூரம் அர்ப்பணிப்பாக இருக்கின்றாரோ, அதேபோல் மகள் ஸ்ருதியும் தன்னை அர்ப்பணிக்கத் தொடங்கிவிட்டார். அண்மையில்கூட ஓர் ஆண்கள் சஞ்சிகைக்கு மிக ஆபாசமாக போஸ் கொடுத்திருந்தார். இப்பொழுது ஹிந்தியில் அவர் நடித்துக்கொண்டிருக்கும் டி-டேய்ஸ் என்ற படத்தில் பாகிஸ்தான் விபசாரியாக நடித்திருக்கிறார்.

நிகில் அத்வானியின் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் அர்ஜுன் ரம்பால் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். இத்திரைப்படம் யுத்த உளவு பின்னணியைக் கொண்டது. டி-டேய்ஸ் என்பது அதனைத்தான் குறிக்கும். இரண்டாம் உலகப் போரின்போது நாசிப் படைகளின் ஊடுருவலை டி-டேய்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள். டி-டேய்ஸ் என்பதன் பதம் உளவுப்போர் என்பதுபோல் அமைகின்றது.

இந்த யுத்தப் பின்னணியில் உருவாகும் டி-டேய்ஸ் படத்தில் பாகிஸ்தான், கராய்ச்சியில் வாழ்கின்ற விபசாரியாக ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார். இத்திரைப்படம் எதிர்வரம் ஜூலை மாத்தில் திரைக்கு வரவிருக்கிறது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் நிகில் அத்வானி கூறுகையில்...

“ஸ்ருதி ஹாசன் இப்படியான ஒரு பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டமை எனக்கு வியப்பாக இருந்தது. 3 படத்தில் அவரது தத்ரூபமான நடிப்பைப் பார்த்து நான் அசந்துபோயிருந்தேன். அதன் ஈர்ப்பினால்தான் இப்படத்தில் அவரை நடிக்குமாறு கேட்டபோது அவரும் உடனே ஒத்துக்கொண்டார். ஸ்ருதியின் வாழ்வில் இத்திரைப்படம் ஒரு பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை” என்று குறிப்பிட்டார்.

ஸ்ருதியின் கவர்ச்சி மழையில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தினைப் பார்ப்பதற்கு ஜூலை மாதம் 19ஆம் திகதிவரை காத்திருக்கவேண்டும். இப்போதைக்கு இந்த ஸாம்பில் படங்களை மாத்திரம் பாருங்கள்...!!!






Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &