சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கும் முகமாக ஐ.நா இடைக்கால அமைதிகாக்கும் படையில் சேவையாற்றும் இலங்கையின் சிங்ஹ படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கெளரவிக்கப்பட்டுள்ளனர்.குறித்த படைப்பிரிவைச் சேர்ந்த 150 இலங்கை இராணுவீரர்களுக்கு அவர்களது சேவைக் கால நிறைவை முன்னிட்டு மிகவும் மதிப்பும் பெறுமதியுமிக்க ஐக்கிய நாடுகளின் பதக்க விருது வழங்கும் விழா அன்மையில் லெபனானில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் சிங்ஹ படைப் பிரிவின் கேனல் மேஜர் ஜெனரல் போனிபேஸ் பெரேரா இராணுவத் தளபதியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் முகமாக கௌரவ அதிதியாக கலந்து கொண்டதுடன் அவர் இராணுவ மரியாதையுடனும் கலாசார பாரம்பரியங்களுடனும் வரவேற்கப்பட்டார்.
ஐ.நா இடைக்கால அமைதிகாக்கும் படையில் இலங்கை இராணுவத்தின் சிங்ஹ படைப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகளும்- 140 படைவீரர்களும் சேவையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.