டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணிக்கும், ஸ்ரோக் அணிக்குமிடையிலான போட்டியில் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர்ஸ் அணி சார்பாக 20ஆவது, 83ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டதோடு, ஸ்ரோக் அணி சார்பாக 3ஆவது நிமிடத்தில் கோல் பெறப்பட்டிருந்தது. இப்போட்டியின் 47ஆவது நிமிடத்தில் ஸ்ரோக் அணியின் அடம் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.
எவேர்ட்டன் அணிக்கும், வெஸ்ட் ஹாம் யுனைட்டட் அணிக்குமிடையிலான போட்டியில் எவேர்ட்டன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக 6ஆவது 60ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டன.
லிவர்பூல் அணிக்கும், ஃபுல்ஹாம் அணிக்குமிடையிலான போட்டியில் லிவர்பூல் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணி சார்பாக 36ஆவது, 62ஆவது, 85ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டதோடு, ஃபுல்ஹாம் அணி சார்பாக 33ஆவது நிமிடத்தில் கோல் பெறப்பட்டிருந்தது.
நோர்விச் அணிக்கும், வெஸ்ட் ப்ரோம்விச் அணிக்குமிடையிலான போட்டியில் நோர்விச் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. நோர்விச் சார்பாக 25ஆவது, 62ஆவது, 65ஆவது, 90ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டிருந்தன.
நியூகாசில் யுனைட்டட் அணிக்கும், குயீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில் நியூகாசில் யுனைட்டட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. நியூகாசில் யுனைட்டட் சார்பாக 18ஆவது, 35ஆவது நிமிடங்களில் கோல்கள் பெறப்பட்டதோடு, குயீன்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் அணி சார்பாக 11ஆவது நிமிடத்திலும் கோல்கள் பெறப்பட்டன. இதில், 81ஆவது நிமிடத்தில் எலியட் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தார்.
சண்டர்லான்ட், சௌதம்டன் அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. சண்டர்லான்ட் சார்பாக 68ஆவது நிமிடத்திலும், சௌதம்டன் சார்பாக 76ஆவது நிமிடத்திலும் கோல்கள் பெறப்பட்டிருந்தன.
மன்செஸ்டர் யுனைட்டட் அணிக்கும், ஸ்வன்சீ அணிக்குமிடையிலான போட்டியில் மன்செஸ்டர் யுனைட்டட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. மன்செஸ்டர் யுனைட்டட் சார்பாக ஹெர்னான்டஸ் 39ஆவது நிமிடத்திலும், பேர்டினன்ட் 87ஆவது நிமிடத்திலும் கோல்களைப் பெற்றிருந்ததோடு, ஸ்வன்சீ சார்பாக 49ஆவது நிமிடத்தில் மிச்சு கோலொன்றினைப் பெற்றிருந்தார்.