சீ.ஐ.டி.யினரால் தடுத்து வைக்கப்பட்டு சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்ட ஆஸாத் சாலி, தற்போது தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த ஆஸாத் சாலி விடுதலை செய்யப்பட்டதையடுத்து அவர் மேலதிக சிகிச்சை பெறுவதற்காக இவ்வாறு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

PRE UPDATED:

PRE UPDATED:
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் அசாத் சாலி சென்னையில் வைத்து தெரிவித்திருந்த கருத்து, அறியாமல் செய்த தவறு எனவும் அதற்காக மன்னிப்புக் கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு நேற்றிரவு சத்திய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அரசாங்கத்துடன் தொடர்புடைய உயர் மட்டத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
.
சத்திய கடிதம் மூலம் அசாத் சாலி, ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரியுள்ளதால், அவர், ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இன்று (10) விடுதலை செய்யப்படலாம் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.