பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அஸாத் சாலி கைது செய்யப்பட்டமை நீதி அமைச்சர் ஹக்கீமை கடும் கோபம்கொள்ள செய்துள்ளது . அரசாங்கத்தின் இந்த கைது நடவடிக்கையை மீது ஹக்கீம் கண்டனம் தெரிவித்துள்ளார் . இதை தொடர்ந்து கோடபாய ராஜபக்ஷ நீதியமைச்சர் ஹக்கீமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார் இதன்போதே சூடான வார்த்தை பிரயோகங்கள் பரிமாறப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது .
குறித்த தொலைபேசி உரையாடலின் பின்னர் குற்ற புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரின் இல்லத்தில் சந்தித்து அஸாத் சாலி கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை விளக்கியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
