10 தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை பங்களுர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. குண்டுத் தயாரிக்கப் பயன்படும் வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, குறித்த பத்து பேருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
2002ம் ஆண்டு ப்ரேசர் நகரில் குறித்த பத்து பேரையும் காவல்துறையினர் கைது செய்திருந்தனர். நீதிமன்ற விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். எனினும், வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்து சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். செசன்ஸ் நீதவான் எம்.எஸ். பாலகிருஸ்ணா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய இரண்டு சந்தேக நபர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
May 31, 2013
10 LTTE சந்தேக நபர்களை பெங்களூர் நீதிமன்றம் விடுதலை!
Posted by AliffAlerts on 10:36 in NF | Comments : 0