தனது தாயாரை பொல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு பிரதேசத்திலிருந்து தப்பியோடிய 27 வயதுடைய மகனை கைது செய்வதற்கான விசாரணைகளை ருவன்வெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
பணம் சம்பந்தப்பட்ட தகராறே இந்தக் கொலை சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ருவன்வெல்ல கல்பாத்த பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவரே தனது மகனால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.