BREAKING NEWS

Apr 11, 2013

பாட்ஷா ரீமேக்கில் இளைய தளபதி விஜய்



டோலிவுட்டில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் நடித்த பாட்ஷா(BAADSHAH) ரீமேக்
படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒரிஜினல் படத்தில் நடித்த காஜல் அகர்வால் ரீமேக்கிலும் விஜய் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

ஜெயம் ரவிதான் அதிக ரீமேக் படங்களில் நடித்தவர் என்று அறியப்பட்ட நிலையில் இப்போது அந்த வரிசையில் விஜயும் சேர்ந்து விடுவார் என்று கூறப்படுகிறது.

தெலுங்கு பாட்ஷாவின் தமிழ் பட உரிமையினை பி.வி.பி. சினிமா நிறுவனத்தின் பிரசாத் பொட்லூரி வாங்கியிருக்கிறார். இந்த படத்தின் ரீமேக்கில் விஜய் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் தலைவா படப்பிடிப்பு முடிந்தவுடன் இதற்காக ஒப்பந்தம் முடிவாகுமாம். இந்த பாட்ஷாவிற்கும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பாட்ஷாவிற்கும் எந்த தொடர்பும் இல்லையாம்.

டோலிவுட் மசாலா இயக்குநர் ஸ்ரீனு வைத்லா இயக்கியுள்ள பாட்ஷா (BAADSHAH) படத்தின் பட்ஜெட் 55 கோடியாம். ஆனால் முதல் நாளே 13.5 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இந்தப் படம் இன்னமும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

எனவே ரீமேக் செய்யப்பட்டால் தமிழிலும் அதேபோல் வெற்றிபெற வைக்கலாம் என்கின்றனர் பட அதிபர்கள்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &