தெற்கு அதிவேக வீதியில் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளதுடன் வாகனம் அதிவேக மதில் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜீப் வண்டியை செலுத்திய தந்தை உயிரிழந்துள்ளதுடன், தாய் மற்றும் மகள் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மஹரகம பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே உயரிழந்துள்ளார்.
