அதிகமாக மது அருந்துவோர் நாடுகளில் இலங்கை நான்காம் இடத்தில்!
Posted by
AliffAlerts
on
14:58
in
NL
|
உலகிலேயே மது அருந்துவோர் அதிகமாகவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது. எனவே நாட்டில் மதுவுக்கு 'முற்றுப்புள்ளி' என எப்படிக்கூறமுடியும் என தேசிய சங்க சமேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பண்டிக்கைக்கு அன்று ஊருக்கு செல்லும்போது 'ஒரு கை வெற்றிலையுடனேயே செல்வார்கள். இன்று இரண்டு போத்தல் சாராயத்துடன் செல்லும் கலாசார சீரழிவு உருவாகியுள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.
இது மதுவுக்கு 'முற்றுப்புள்ளி' என்பது இல்லை, இது மதுவுக்கு (கமா) என்றே கூறவேண்டும். அதாவது, தொடர்கதையாகிவிட்டது என்று ரஜவத்தே வப்ப தேரர் குறிப்பிட்டுள்ளார்.