15 வயது மாணவி மீது வல்லுறவு: பாட்டியும் பேரனும் கைது
Posted by
AliffAlerts
on
15:05
in
NL
|
பதினைந்து வயது நிரம்பிய மாணவியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய இளைஞனும் அதற்கு உடந்தையாக இருந்த மாணவியின் பாட்டியும் பதுளை படல்கும்பறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
படல்கும்பறை நசல்க தேசிய பாடசாலை மாணவியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.
இம்மாணவி தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து விளக்கமான கடிதமொன்றினை பாடசாலையில் உள்ள பொலிஸ் புகார் பெட்டியில் போட்டிருந்தார். இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் பாட்டியும் பேரனும் என தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியபோது வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.