இதனையடுத்து சில திருத்தங்களுடன் மின் கட்டண உயர்வுக்கான அனுமதியை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது. இதனால் ஏப்ரல் 12ஆம் திகதியிலிருந்து மின் கட்டணத்தினை அதிகரிக்கவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை, இலங்கை மின்சார சபை முன்வைக்கும் மின் கட்டண உயர்வுக்கான சூத்திரம் நியாயமானதாக இல்லாதுவிடின் மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நுகர்வோர் இயக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.