BREAKING NEWS

Mar 24, 2013

கண்டி சுவ செவனவிற்கு செல்கிறீர்களா? இதை கவனியூங்கள்



يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا بِطَانَةً مِنْ دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ الْبَغْضَاءُ مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ الْآيَاتِ إِنْ كُنْتُمْ تَعْقِلُونَ ஜآل عمران : 118

நம்பிக்கை கொண்டோரே! உங்களில் இருந்தே அன்றி உங்கள் பாதுகாவலர்களை (உதவியாளர்களை) எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு (உடல், உள ரீதியில்) தீங்கிழைப்பதை அவர்கள் ஒரு பொருட்டாகக் கூட கொள்ளமாட்டார்கள். நீங்கள் சிரமப்படுவதை அவர்கள் மனமாற விரும்பிவிட்டனர்.  நிச்சயமாக அவர்கள் வாய்களில் இருந்து கோபம் வெளிப்பட்டுவிட்டது. அவர்களின் இதயங்கள் மறைத்து வெத்திருப்பதோ (அனைத்தையும் விட) பெரியதாகும். நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாக இருந்தார்கள் நமது அத்தாட்சிகைள நிச்சயமாக நாம் உங்களுக்கு தெளிவுபடுத்தி விட்டோம் (ஆலுஇம்ரான்: வசனம்: 118) 

هَا أَنْتُمْ أُولَاءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِالْكِتَابِ كُلِّهِ وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ قُلْ مُوتُوا بِغَيْظِكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ  آل عمران : 119

இவர்களையா நீங்கள் நேசிக்கின்றீர்கள். அவர்கள் உங்களை நேசிப்பதில்லையே! நீங்கள் வேதத்திலுள்ள அனைத்தையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். உங்களை அவர்கள் சந்தித்தால் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறுகின்றனர்;. உங்களை விட்டும் அவர்கள் விலகிச் செல்லும் போது கோபத்தால் தமது விரல் நுணிகளைக் கடித்துக் கொள்கின்றனர். நீங்கள் உங்கள் கோபத்துடனேயே செத்துவிடுங்கள் என்று (நபியே) நீர் கூறிவிடும். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் இருப்பதை நன்கறிந்தவன். (ஆலுஇம்ரான். 119)

ஆரம்பகாலங்களில் எதிரிகள் இனம் காணப்பட்டவர்கள். ஆனால் இன்று உங்கள் எதிரி உங்களோடு உண்டு பருகி, பழகி உறவாடி உங்கள் அருகாமையில் உறங்கி உறவாடுகின்றான். உங்கள் எதிரியை நீங்கள் சிரித்தவனாக, பாதுகாவலனாகக் காண்பீர்கள். 

ஹலால் விஷயத்தில் கருத்து முரண்பாடுகளோடும், கருத்துமுரண்பாடுகள் கழைந்தும்  உலமா சபைக்கு உதவி செய்த இஸ்லாமிய அமைப்புக்கள் இருக்க, நபிகள் நாயகத்தின் பரம்பரையில் வந்தவர்கள் என்று கூறிக் கொண்டு ஜனாதிபதிக்கு கூஜா தூக்கிக் கொண்டும், ஃபாத்திஹா ஓதிக் கொண்டும், மகிந்த சிந்தனை துதிபாடிக் கொண்டும்  இருப்பவர்கள் ஹலால் விஷயத்தில் மௌனம் காத்தவர்கள், இரண்டு பிக்குகள் தமிழ்நாட்டில் தமிழர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து கச்சைகட்டிக் கொண்டு களம் இறங்கி கமெண்ட் கொடுத்தவர்ள் அகில இலங்கை உலமா சபைக்கு ஏற்பட்ட அசௌகரிகமான நிலையில் மௌனிகளாக இருந்தனர். இன்றும் இதே நிலையில்தான் அசையாத கற்களாகவே இருக்கின்றனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை பற்றி மௌனம் காக்கும் இவர்கள் ' சத்தியத்தைப் பேசாதவன் வாய் அடைத்தவன். அசத்தியத்தைப் பேசுபவன் பேசும் ஷைதான் என்றார் இப்னுல் கைய்யிம் என்ற அறிஞர். 

இப்போது தலைப்பிலுள்ள விஷயத்திற்கு வருகின்றேன். சுவசெவன வைத்தியசாலையில் பொதுபல சேனா இரகசிய கூட்டம் நடத்தி தனது நஞ்சை முஸ்லிம்களுக்கு எதிராகக் கக்கியுள்ளது. 

முஸ்லிம் சமூகத்தின் விரோதிகளான பொதுபல சேனாவிற்கு அள்ளிய அள்ளிக் கொடுக்கும் முஸ்லிம்களே இனியாவது பின்வரும் தீர்மானத்திற்கு வருவீர்களா? 

1- அதி நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலைகளை நாடளாவிய ரீதியில் நிறுவுதல், 

2- சிறந்த முஸ்லிம் வைத்தியர்களைக் கொண்டு அதை நிர்வகித்தல், 

3- அப்பாஸியர் ஆட்சியில் நிறுவப்பட்ட வைத்த சாலைகளில் காணப்பட்ட வழிமுறைகைளத் தழுவியதாக தற்போதைய காலத்திற்கு  அமைவாக இஸ்லாத்தின் தூதையும், முன்மாதிரியையும் பறைசாட்டும் வைத்தியர்களையும் வளவாளர்களையும் கொண்டு நிறுவப்படுதல், 

4- இஸ்லாமிய பண்பாடு நாகரீகம் என்பவற்றை அறிமுகப்படுத்துதல், 

5- தொழுகை அறைகள், சூப்பர் மார்கட், நோயாளிகளை பார்வையிடுவோர் போன்றவவர்களுக்கான வசதி செய்து தரப்படுதல் போன்ற இன்னோரென்ன அம்சங்கள் கொண்டதாக அமைத்தல். 

முஸ்லிம் மக்களின் வருவாயில் 90 வீத வருமானத்தைப் பெற்று கோடிக்கணக்கில் பணம் திண்ணும் சுவ செவன வைத்தியசாலையிலும், பொது வைத்தியசாலைகளிலும் மருந்துகள் பெறுவோர் முஸ்லிம் வைத்தியரிடம் அதைப் பாரசீலினை செய்த பின்பு பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளுமாறு அங்கு பணிபுரியும் ஒரு பௌத்த சகோதரிதான் அறிவுரை கூறியு;ளளார். 

ஆரம்பத்தில் இடம் பெறும் அல்குர்ஆன் வசனத்தில் கூறப்பட்டுள்ளது போன்று நடந்து இந்தக்கயவர்கள் இப்படித்தான் நடப்பார்கள். முஸ்லிம்களாகிய நாம் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டுமானால் தூர நோக்குடன் கூடிய திட்டங்களை வகுத்து பொதுபல சேனாவிற்கு ஆசீர்வாதம் வழங்கு அரசையும், அதன் ஆதரவாளர்களையும் கவிழ்கக இனிவரும் காலங்களில்  தயாராகுவோம்.

(அபூ நதா – திகன-ஹிஜ்ராபு)

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &