BREAKING NEWS

Mar 24, 2013

கிரிக்கட் போட்டியை பார்த்து வீடு திரும்பியவர் வெட்டிக் கொலை


ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியை பார்த்து வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சூரியவெவ, மீகஹபுர பகுதியில் நேற்று நள்ளிரவு வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது உயிரிழந்தவர் 27 வயதான இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் சூரியவெவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &