BREAKING NEWS

Mar 24, 2013

ஒபாமா - இஸ்ரேலின் தொழிலாளி! – ஹிஸ்புல்லா!

ஒபாமா-இஸ்ரேலின் தொழிலாளி! – ஹிஸ்புல்லா!


பெய்ரூத்:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இஸ்ரேலின் தொழிலாளி என்று லெபனானின் ஹிஸ்புல்லாஹ் குற்றம் சாட்டியுள்ளது. நேற்று முன் தினம் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒபாமா, அந்நாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததற்கு பதிலளித்துள்ளது ஹிஸ்புல்லாஹ்.

ஹிஸ்புல்லாஹ்வை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கவேண்டும் என்று லெபனான் அரசுக்கு ஒபாமா அறிவுறுத்தியிருந்தார். ‘அமெரிக்கா என்ற சுதந்திர நாட்டின் உயர் ஆட்சியாளர் என்ற நிலையில் ஒபாமா பேசவில்லை. இஸ்ரேலின் நிலைப்பாடுகளை அரபு நாடுகள் அங்கீகரிக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார். ஆனால், ஃபலஸ்தீன் மக்களின் எந்த கோரிக்கையையும் ஒபாமா அங்கீகரிக்க தயாரில்லை’-ஹிஸ்புல்லாஹ் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்
.

24 Mar 2013 'US turns CIA into Israel's servant' says hisbullah

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &