BREAKING NEWS

Mar 31, 2013

இலங்கைக்கு எதிராக சூர்யா கார்த்தி ரசிகர்கள் ஆர்பாட்டம்

இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பிரமாண்ட உண்ணாவிரதம் நடத்துகின்றனர்.

மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இதுவரை ஈழப் பிரச்சினை குறித்து பாராமுகமாக இருந்த தகவல் தமிழக தொழில் நுட்ப பணியாளர்கள் , அரசு ஊழியர்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராடுகின்றனர். தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும், உலகெங்கும் பரவிக் கிடக்கும் உறவுகள் சுதந்திர ஈழத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது.

நடிகர்களின் ரசிகர்களும் இந்தப் போராட்டத்தில் கைகோர்த்துள்ளனர். முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இப்போது நடிகர் சூர்யா மற்றும் அவர் தம்பியும் நடிகருமான கார்த்தியின் ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர்.

இவ்விரு நடிகர்களின் சென்னை மாவட்ட ரசிகர்கள் இணைந்து 31-03-13 சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையின் எதிரே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதத்தை பிரமாண்டமாக நடத்தினர்.

* தனித் தமிழீழம் அமைய ஈழத் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு

* சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஊடகங்களும் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப் படுகொலை என்பதற்கு அளித்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இலங்கை அரசு மீது நடவடிக்கை

* யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துதல்

* தமிழக மீனவர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை கடற்படை மீது கடும் நடவடிக்கை

* உலகத் தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதத்தில் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தனித் தமிழ் ஈழம் உள்ளிட்ட தீர்மானங்களை உடனே நிறைவேற்றுதல் -

உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வழியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.

சூர்யா, கார்த்தி ரசிகர்களின் இந்த புதிய போராட்ட அறிவிப்பு தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &