BREAKING NEWS

Mar 22, 2013

கொழும்பு துறை முகத்தில் ஈரானின் யுத்தக் கப்பல்கள்



ஈரானின் இரண்டு யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு கப்பல்களும் தென்கிழக்காசியாவின் மலாக்கா நீரிணையூடான கண்காணிப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவுசெய்து கொழும்புக்கு வந்துள்ளன.

சர்வதேச கடல் எல்லையில் அமைந்துள்ள கடல் மார்க்கங்களில் ஈரானின் வர்த்தக கப்பல்களை பாதுகாக்கும் வகையில் அந்த நாடு தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடற்கொள்ளையர்களிடம் கப்பல்கள் சிக்குவதை தடுப்பதே இந்த கண்காணிப்பு நடவடிக்கையின் நோக்கம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &