அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையில் இலங்கை தூதுக்குழு ஜெனீவா செல்லவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் குழுவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மாத்திரமே அமைச்சர் ஆவார் எனவும் ஏனைய அனைவரும் அரசாங்க அலுவலர்கள் ஆவர்.
இந்தக் குழுவுக்கு தலைமை தாங்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.
ஜனாதிபதி தலைமையில் இது தொடர்பான கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஏனைய உயர் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Feb 22, 2013
மஹிந்த சமரசிங்க தலைமையில் தூதுக்குழு ஜெனீவா செல்லும்
Posted by AliffAlerts on 13:24 in NL | Comments : 0
