BREAKING NEWS

Feb 24, 2013

முஸ்லிம்கள் ஹலால் முத்திரை இல்லாத உணவுகளை வாங்க விற்க கூடாது

ஹலால் சான்றிதழ் பொறிக்கப்படாத எந்தப் பொருட்களையும் முஸ்லிம்கள் கொள்வனவு செய்யவோ உண்ணவோ கூடாது என மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடாக அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"ஹலால் உணவு என்பது தனியே முஸ்லிம்களுக்குறியது. இதனை எந்தவொரு சந்தர்பத்திலும் வேறு மதத்தவர்கள் உண்ன வேண்டும் என முஸ்லிம்கள் கட்டாயப்படுத்தவில்லை. அதேபோன்று ஹலால் இல்லாத எந்தவொரு உணவுப் பண்டங்களையும் முஸ்லிம்கள் உண்ன வேண்டும் என வேறு எந்த மதத்தவர்களும் கட்டாயப்படுத்துவதை அங்கீகரிக்கவும் முடியாது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் தயாரிப்புகளை முஸ்லிம்கள் உண்னுவதாக இருந்தால் அதில் ஹலால் முறை பேணப்பட வேண்டும் என்றும் அவ்வாறு ஹலால் உணவாக தயாரிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு ஹலால் சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.

இதன் நோக்கம் முஸ்லிம்களை புனித இஸ்லாமிய மத அடிப்படையில் வழிநடத்துவதற்கே அன்றி சிங்கள சமூகத்தினரும் ஹலால் உணவை உண்ன கட்டாயப்படுத்ததுவதற்கல்ல.

இதனை குறித்த மதவெறி பிடித்தவர்கள் நன்கு அறிந்து இருந்த போதிலும் திட்டமிட்ட அடிப்படையில் ஹலால் சான்றிதழ்களை தடை செய்யக்கோரி பகிரங்கமாக ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் காவியுடையுடன் ஈடுபட்டு பாரிய நெருக்கடிகளை முஸ்லிம்களுக்கும் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் அகில இலங்கை ஜமய்யத்துல் உலமா சபைக்கும் ஏற்படுத்தி வருவதோடு ஹலால் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டுள்ள உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அண்மைக் காலமாக இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பௌத்த மத வெறிபிடித்தவர்களான பொதுபலசேனாவும் ஜாதிக ஹெல உறுமயவும் இணைந்து முஸ்லிம்களின் அடிப்படை மத உரிமைகளுக்கு குந்தகம் விளைவித்து வருவதுடன் புனித இஸ்லாம் மதத்தை பின்பற்றவும் பல்வேறு தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

அத்தோடு ஒரு முஸ்லிம் உணவு உண்னுகின்ற போது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய இஸ்லாமிய அடிப்படையான ஹலால் விடயத்தில் இருந்து முஸ்லிம்களை திசை திருப்பி ஹராமான உணவு வகைகளை கட்டாயப்படுத்தி முஸ்லிம்களை உணணவைத்து இஸ்லாமிய மதத்திலிருந்து தூரமாக்கின்ற விடயத்தினையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் ஒரு சில உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்த மதவாதிகளின் அச்சுறுத்தல்;களுக்கு அஞ்சி தாங்கள் பொற்றுக் கொண்டுள்ள ஹலால் சான்றிதழ்களை இரத்து செய்வதாக அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது. அவ்வாறு ஹலால் சான்றிதழ்களை இரத்துச் செய்துள்ள தயாரிப்புக்களையும் ஏனைய புதிய தயாரிப்புக்களையும் ஒருபோதும் முஸ்லிம்கள் கொள்வனவு செய்யவோ அல்லது உண்ணவோ கூடாது.

அதேபோன்று முஸ்லிம் வர்தகர்கள் ஹலால் முத்திரை பொறிக்கப்படாத எந்தவொரு தயாரிப்புக்களையும் கொள்முதல் செய்வதையும் விற்பனை செய்வதையும் முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &