BREAKING NEWS

Feb 19, 2013

வீதியில் சிகரெட் வீசினால் அபராதம்!

வாகனத்திலிருந்து சிகரெட்களை வீதியில் வீசுபவர்களுக்கு ரூ 7500 அபராதம் விதிக்கப்படும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு மாநிலமான துபாயின், போக்குவரத்துத்துறை இயக்குனர் முஹம்மத் ஸெய்ப் அல் ஷபீன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இதன்படி வாகனத்தில் செல்பவர்கள் சிகரெட்டினை வெளியில் எறிந்தால், 500 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.

2011 ஆம் ஆண்டு துபையில், சாலை விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக இருந்தது எனக் குறிப்பிட்ட ஸெய்ப், 2012ல் இந்த எண்ணிக்கை 123 ஆக குறைந்திருப்பதாக தெரிவித்தார். 2012 ஆம் ஆண்டு, வாகனம் ஓட்டும் போது அலைபேசி உபயோகித்த 44,000 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &