எதற்காகக் காத்திருந்தார்கள் என்பது தெரியவில்லை ஆனால் இன்று மந்திராலோசனைக்கு ஜனாதிபதி பணித்துள்ளார். அதுவும் “வயதாகிவிட்டது இவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று அவரே கூறிய ஒருவர் தலைமையில் (அவர் எதற்காக அவ்வாறு கூறினார் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்).
அவரோடு கூடும் விசுவாசிகள் குறித்த சந்தேகம் வரக்கூடாது என்பதற்காகவா அல்லது முடிவொன்று எடுக்கப்படக்கூடாது என்பதற்காகவா அனைத்து முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் அழைக்கப்படுகிறார்கள் அல்லது பொது பல சேனாவுக்கு இன்னும் நேரம் வழங்கி மேலும் இனவாதம் பெருக இடமளிக்க ‘காலக் கொள்வனவுக்காக’ வா இந்தக் கூட்டம் அதுவும் இல்லையென்றால் பெருகி விட்ட இனவாதத்தை ஜெனிவா கூட்டம் நெருங்கி வந்ததும் அடக்கி ‘மனித நேயப் பெருமானாக’ அவர் உருவெடுக்கவா இந்தக் கூட்டம்? என்று பல நூறு கேள்விகள் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
எவ்வாறாயினும், மார்ச் மாதம் மனித உரிமை கூட்டத்தொடர் வரையாவது ஜம் இயத்துல் உலமாவை தோழர்களாக வைத்திருப்பதன் தேவை அரசுக்கு இருக்கிறது என்பதால் தற்காலிகத் தடைகளும் பதட்டத்துடனுனான அமைதியம் “தீர்வாகக்” காண்பதற்குத்தானா இந்தக் கூட்டம் எனும் சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களின் ஒற்றுமையான குரல் ஒலித்தால் நிர்ப்பந்தம் தானாக வரும்? ஆனால் ஒற்றுமை ஏற்படுமா?