BREAKING NEWS

Feb 19, 2013

ஈரானில் புத்த சிலை விற்பனை தடை

ஈரானில் உள்ள கடைகளில் கௌதம புத்தரின் சிலைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பொம்மைகள் பலவற்றுக்கு அந்த நாட்டு அரசாங்கம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.

மேற்கத்தேய போக்குகளை தடுக்கும் பொருட்டு பார்பி உள்ளிட்ட பொம்மைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அங்கு தற்போது புத்தர் சிலைகள் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் சட்டபூர்வமான மதமாக இஸ்லாம் மட்டுமே உள்ளது.

பௌத்த மதம் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாகவே அங்குள்ள கடைகளில் புத்தர் சிலைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலைகள் விற்கப்படுவது, கலாச்சார அத்துமீறல் என, அந்த நாட்டு கலாசார பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &