BREAKING NEWS

Feb 23, 2013

பெற்றோல், டீசலின் விலைகள் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை உயர்த்தியுள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 90 மற்றும் 95 ரகங்களைச் சேர்ந்த ஒரு லீட்டர் பெற்றோலின் விலை மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒக்டேன் 90 ரகத்தைச் சேர்ந்த ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 162 ரூபா வரையும் ஒக்டேன் 95 ரகத்தைச் சேர்ந்த ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 170 ரூபா வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசலின் விலை ஆறு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 121 ரூபாவாக அமைந்துள்ளது.

ஒரு லீட்டர் சுப்பர் டீசலின் விலையும் மூன்று ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 145 ரூபாவாகும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &