BREAKING NEWS

Jan 7, 2013

திவிநெகும தொடர்பில் நீங்களும் தெளிவு பெற வேண்டுமா ?

திவிநெகும வேலைத்திட்டம் தொடர்பில் கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் சமய தலைவர்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துதார்.

இந்த வேலைத்திட்டம் இந்த மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

திவிநெகும தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் அரசங்க உயர் மட்ட அதிகாரிகளுக்கும் தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம் நிகழ்வின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கிராம சேவையாளர்கள், சமுர்த்தி அதிகாரிகள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளும் இந்த வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &