BREAKING NEWS

Jan 7, 2013

போலி நாணயத் தாள்களை அச்சிட்ட பாடசாலை மாணவன் உட்பட மூவர் கைது

போலி நாணயத்தாள்களை அச்சடித்தமை மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவன் ஒருவன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிபில, தொடங்கொட பிரதேசத்தில் 500 ரூபா போலி நாணய தாள்கள் 23 வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து ஏனைய இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 500 ரூபா பெறுமதியான 42 போலி நாணயத்தாள்களும், நாணயத்தாள்களை அச்சிட பயன்படும் இயந்திரங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &