BREAKING NEWS

Jan 7, 2013

அவதானம்: இன்று பலத்த காற்று மழை கடற் கொந்தளிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் கடுங்காற்று வீசக்கூடுமென வானிலை அவதான நிலையத்தின் கடமை நேர அதிகாரி ஜீவன் கருணாரத்ன எச்சரித்துள்ளார்.

இதன்படி, மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் அதிக காற்று வீசுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வங்காள விரிகுடாவில் இலங்கையிலிருந்து சுமார் 500 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டிருக்கும் தாழமுக்கம் காரணமாகவே வீசும் காற்றின் வேகம் அதிகரித்திருப்பதாகவும் வானிலை அவதான நிலையம் கூறியது.

இந்த தாழமுக்கம் தொடர்ந்தும் வலு வடையுமாயின் கிடைக்கும் மழை வீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் தாழமுக்கத்தின் வீரியம் குறித்து எதனையும் திட்டவட்டமாக கூறமுடியாதென தெரிவித்த அவ்வதிகாரி, சூறாவளி குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவ்வாறான தொருநிலை ஏற்படுமாயின் முன்கூட்டியே மக்கள் அறிவுறுத்தப்படுவரெனவும் கூறினார்.

இன்றைய வானிலை அடிப்படையில் கிழக்கு, ஊவா ஆகிய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இன்று காலை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்.

நண்பகல் அல்லது மாலை வேளைகளில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்வதுடன், நாட்டின் ஏனைய பிர தேசங்களிலும் இடைக்கிடை மழை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடலில் மாத்தறை முதல் ஹம்பாந் தோட்டையூடாக திருமலை வரை இடி, மின்னலுடன் மழை பெய்வதுடன், மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுமென வும் அவர் தெரிவித்தார்.

இடைக்கிடை கடல் கொந்தளிப்பாக காணப்படும் ஆகையால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானமாக செயற்படுவது அவசிய மெனவும் அவர் வலியுறுத்தினார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &