பறகஹதெனியவில் இன்று இடம்பெற்ற பதற்ற நிலைக்கு பிரதான காரணம் எமது பிரதேசத்தின் மூன்று முஸ்லிம் சகோதரர்களின் அடவடித்தானமான தரக்குறைவான செயற்பாடேயாகும்.
இன்று பௌத்த பிக்குமார் பறகஹதெனிய சந்தியில் வந்து இவ்வாறு “முஸ்லிம்களின் கடைகளுக்குச் செல்ல வேண்டாம்” என சிங்கள சகோதரர்களுக்குத் தெரிவிப்பதற்குரிய பிரதான காரணம் நேற்றைய சம்பவமாகும்.
அதாவது நேற்று இரவூ எமது மூன்று சகோதரர்கள் அநியாயமாக பறகஹதெனிய சந்தியில் நின்று கொண்டிருந்து இரு பௌத்த சகோதரர்களுக்கு அடித்துள்ளதுடன் அவர்கள் படுகாயமடைந்து (ஒருவர் தீவிர நிலையில்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் குறித்தொரு பௌத்த பிக்குவிடம் வேலைபார்க்கும் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நேற்றும் இன்றும் அவர்களது ஆலயத்தில் (பன்சலையில்) இறந்த ஒரு பிக்குவூக்காக மத வைபவத்தை (பிரித்) நடாத்திக்கொண்டிருக்கின்றனர். அதற்காக பல்வேறு பிரதேசங்களிலிருந்து பிக்குகள் வருகை தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்களது வழிபாட்டு நடவடிக்கைகள் சுமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் இவ்வாறு எமது முஸ்லிம் சகோதரர்கள் செயற்பட்ட முறைகேடான நடத்தையின் பிரதிபலனே அவர்கள் வந்து தமது கவலையை இவ்வாறு வெளிப்படுத்துவதற்கான பிரதான காரணமாகும்.
குறித்த சம்பவத்துக்கு காரணமாக இருந்த மூவரும் தற்போது பொலிஸாரினால் கைது செய்யப்ட்டு சிறைவாசத்திலிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பல நூற்றாண்டு காலமாக முஸ்லிம் சிங்கள சகோதரர்கள் மிகவூம் அந்நியோன்மான முறையில் சகோதரத்துவத்துடன் இருக்கும் பறகஹதெனியவில் இவ்வாறு ஒரு சிலரது நடத்தை குறைபாட்டின் விளைவாக இடம்பெற்ற இச்சம்பவத்துகு;கு இவ்ரகளை வழிநடாத்துபவர்கள் பிரதான காரணமாகும் .இன்று பறகஹதெனியவில் இளைஞர்களின் முறைகேடான நடத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாது பெயரளவில் பெயின்ட் பூசுவது போன்று நடந்துகொண்டு தமது எதிர்காலத்துக்காக தயாரிப்புக்களை மேற்கொள்வது கவலையான விடய்மாகும்.
எனவே தற்போதைய நிலமையை கருத்திற்கொண்டு சமூக வளைதளங்களில் ஒரு தலைப்பட்சமாக தகவல்களை பிரசுரித்து மக்களை குழப்புவதைவிட்டு தவிரந்து உண்மை நிலையை புரிந்து மக்களுககு உண்மையை வெளிப்படுத்தி அவர்களை நிலமையை புரிந்து அமைதியாக நடந்துகொள்வதற்கான வழிவகைகளை மேற்கொள்வது கட்டயாத் தேவையாகும். அதைவிட்டு மக்கள் ஓரிடத்தில் கூடிநின்று சிறிய விடயத்தை ஊதிப் பெரிதாக்கும் வகையில் நடந்துகொள்வதை தவிர்ந்து கொள்ளுவது சாலச் சிறந்ததாகும்.