BREAKING NEWS

Jan 22, 2013

பள்ளிவாசல்கள் பற்றிய விபரங்களை வழங்க 7நாள் அவகாசம்: பொது பலசேனா

நாட்டில் உள்ள சகல முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்பான ழுழு விபரங்களையும் அடுத்த 7 நாட்களுக்குள் தமக்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள பொதுபலசேனா, தவறும் பட்சத்தில் தமது அமைப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றினை எடுக்கவேண்டி ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளது.

கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை பொது பலசேனா நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் பின்வருமாறுஇ

நாட்டில் ஒவ்வொரு நகரங்களிலும் பள்ளிவாசல்களை புதிதாக அமைப்பதற்கு முஸ்லிம்களில் வஹாபிகள் முயற்சிக்கின்றனர். அவை ஜிஹாத்துக்கான பங்கர்களாக பயன்படுத்தப்படவுள்ளன. நாம் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்லர். ஜிஹாதை ஊக்குவிக்கும் வஹாபி மற்றும் சலபி பிரிவினரின் செயற்பாடுகளையே எதிர்க்கிறோம்.

தற்போது நாட்டில் 10 முஸ்லிம் அமைப்புக்கள் ஜிஹாதை ஊக்குவித்து வருகின்றன. இவர்கள் மூலமே ஜிஹாத்துக்கான நிதி வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது.எமது உயிரைக் கொடுத்தேனும் நாட்டை நாம் பாதுகாப்போம்.


அல் சபாப் அமைப்புக்கு நிதி உதவி வழங்கும் சவூதி அரேபிய புலனாய்வுத்துறை தலைவரான ஜமான் அல் சஹ்ரானுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுத்தவர் பிரதமரே. முதலில் எமது நாட்டுப்பிரதமரை நாட்டிலிருந்து விரட்டவேண்டும். ஜமானின் நிதிப்பங்களிப்பிலேயே பீஸ் ரி.வி. இயங்குகின்றது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &