BREAKING NEWS

Jan 21, 2013

பலாலி இராணுவ முகாமில் குண்டு வெடிப்பு; இராணுவ வீரர் காயம்

யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவமொன்றில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணியில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு படையினர் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் புதைக்கப்பட்டிருந்த ஏ.பி. (அன்டி பேர்சனல்) ரக நிலக்கண்ணி வெடியொன்றே வெடித்துள்ளது. சம்பவத்தில் லலித் தாமர (வயது 27) என்ற இராணுவ வீரரே காயமடைந்துள்ளார் என்று பலாலி இராணுவ தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. (TM)

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &