சமூகவலைத்தளங்களில் நாம் விளையாட்டாக செய்யும் விடயங்கள் சில வேளைகளில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி விடுவதுண்டு.
இவற்றில் சாதாரணமாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்டு பெரும் சர்ச்சையாக உருவாகுவதனையும், சாதாரண நபர்கள் பிரபலமாகுவதையும் பற்றி நாம் கேள்விபட்டுள்ளோம்.
அந்த வகையில் நோர்வே நாட்டைச் சேர்ந்த இளைஞனொருவன் பேஸ்புக்கில் தரவேற்றிய படமானது பெரும் வரவேற்பையும் அதேவேளை சர்ச்சையையும் சேர்த்து உருவாக்கியுள்ளது.
பீட்டர் கெவ்ர்பேர்க் என்ற குறித்த இளைஞர் தனது பெண் தோழியுடன் சேர்ந்து படமொன்றை தரவேற்றியிருந்தான்.
இப்படத்தில் குறித்த இளைஞன் அப் படத்தில் அட்டையொன்றை ஏந்திய வண்ணமுள்ளனான் அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"Catherine Says that if i can get 1 million likes, she will have sex with me please share and like"
அதாவது தான் 10 இலட்சம் 'லைக்'களை பெற்றால் தனது நண்பியான கெத்தரின் தன்னுடன் உறவுவைத்துக்கொள்வதாக தெரிவிக்கின்றார் எனவே தயவு செய்து இதை லைக் செய்து பகிர்வு செய்யுங்கள் என்பதாகும்.
இப்படம் தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான 'லைக்'களை பெற்றுள்ளது.
தான் விளையாட்டாகவே இதைச் செய்ததாகவும் எவ்வித தவறான எண்ணத்துடன் இதனை தரவேற்றவில்லையெனவும் பீட்டர் கெவ்ர்பேர்க் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் விளையாட்டாக அவர் தரவேற்றிய இப்படம் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பல்வேறு சமூக அமைப்புகள் இவருக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.
