பல்கலைகழகங்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தெரிவாவதில் வீழ்ச்சு ஏற்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் மாணவர்கள் தெரிவாவதில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலவச கல்விக்கு கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படுகின்றது. அந்த இலவச கல்வியில் கற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லை, தொழில் வாய்ப்புக்கு ஏற்றவகையில் கற்றவர்களும் நாட்டில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில், அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கல்வியமைச்சு தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட யோசனைகள் கிடைத்தன. அந்த யோசனைகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிப்பெயர்ப்பதற்கு போதியளவான வசதிவாய்ப்புகள் இன்மையினால் உரிய காலத்திற்குள் அந்த யோசனைகளை வெளியிடமுடியாதுள்ளது.
ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளல்,இடைவிலகல் மற்றும் எழுத்தறிவு போன்றவற்றில் பிரச்சினைகள் இல்லை சார்க்வலய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர்மட்டத்திலும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு அண்மையிலும் நாம் நிற்கின்றோம்.
ஆங்கில பட்டத்தாரி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்புகள் 800 இருக்கின்றன. எனினும் நாட்டில் 202 ஆங்கில பட்டத்தாரி ஆசிரியர்களே இருக்கின்றனர். நாட்டில் 336 பிரதேச செயலங்கள் இருக்கின்றன. அதில் 72 பிரதேச செயலங்களில் விஞ்ஞான பாடசாலைகள் ஒன்றுகூட இல்லை.
சிங்களம்,தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் சகலருக்கும் சமவுரிமை வழங்கும் வகையிலேயே 1000 பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
2009 ஆம் ஆண்டை பொறுத்தவரையில் பல்கலைகழகங்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தெரிவாவதில் வீழ்ச்சு ஏற்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் மாணவர்கள் தெரிவாவதில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அந்த ஆண்டில் பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்களில் சிங்கள மாணவர்களில் 0.9 வீதமும் தமிழ் மாணவர்களில் 0.2 வீதமும் வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் முஸ்லிம் மாணவர்கள் தெரிவாவது அந்த ஆண்டில் மட்டும் 10.8 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தை பொறுத்தவரையில் உயர்தரத்தில் தமிழ் மொழிமூலமான கணித மற்றும் விஞ்ஞான பாடசாலைகள் ஒன்றுக்கூட இல்லை. நாடளாவிய ரீதியில் விஞ்ஞான கூடம் உள்ளடங்களாக 409 பாடசாலைகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், ஒரே பாடசாலையில் 20 வருடங்களுக்கு மேலாக கற்பிக்கும் ஆசிரியர்கள் 3100 பேரும் 10 வருடங்களுக்கு மேலாக கற்பிக்கும் ஆசிரியர்கள் 9300 பேரும் இருக்கின்றனர் அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு நிச்சயமாக இடமாற்றம் வழங்கப்படும் என்றார்.
Dec 23, 2012
முஸ்லிம் மாணவர்கள் கல்வியில் பாரிய வளர்ச்சி :பந்துல குணவர்தன
Posted by AliffAlerts on 01:26 in செய்தி உள்ளூர் | Comments : 0