13வது அரசியல் யாப்பின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைக்கு புதிய யோசனை ஒன்றை முன்வைக்க ஆளும்கட்சி இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
13வது திருத்தச் சட்டம் குறித்து நாட்டில் தற்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படும் நிலையில் புதிய யோசனையை முன்வைக்க தீர்மானித்ததாக ஐமசுமு பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தை தெரிவித்தார்.
இந்த யோசனை மூலம் இலங்கைக்கு புதிய மாகாண சபை முறையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த யோசனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தை தெரிவித்தார்.