BREAKING NEWS

Nov 27, 2012

விண்ணை நோக்கி பாய்ந்தது இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள்

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் சற்று முன்னர் விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.

கடந்த 22ம் திகதி குறித்த செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்படவிருந்த நிலையில் 5 நாட்கள் தாமதமாகி இன்று மாலை விண்ணுக்கு ஏவப்படுகிறது.

சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் கண்டியிலுள்ள பல்லேகலவில் அமைக்கப்படவுள்ளது. இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டதும், உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் 45வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது.

தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தானுக்கு அடுத்ததாக, சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை கொண்டுள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும் இலங்கை பெறும்.















Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &