BREAKING NEWS

Sep 18, 2012

FACEBOOKகில் இருப்பவர்கள் உங்கள் நிஜ நண்பர்கள் அல்லர் - ஜனாதிபதி


நுகேகொட சமுத்ராதேவி மகளிர் வித்தியாலத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துதுகொண்டு உரைநிகழ்த்தும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்  ஜ னாதிபதி தெரிவித்ததாவது,
" நான் அடிக்கடி சொல்லக்கூடிய விடயம் தான் உங்கள் நெருங்கிய நண்பர்கள் உங்கள் தாயூம் தந்தையூம் தான் அவர்களைவிட அதிகமாக உங்களுக்கு அன்பு செலுத்தக்கூடிய எவரும் இல்லை. நெருங்கிய நண்பர் எனபவர் அவரது உயிரையூம் விட உங்களை நேசிக்கக்கூடியவரே. உங்களுக்கு ஏதேனும் சுகயீனம் ஏற்பட்டால் உங்கள் தாயூம் தந்தையூம் எவ்வளவூ துடிதுடிக்கின்றனர். உங்கள் நலனுக்காக என்னவெல்லாம் செய்கின்றனர்.

உங்கள் தாயையூம் தந்தையையூம் நம்புங்கள். அப்படியென்றால் உங்கள் நெருங்கிய நண்பரை இணையத்தள்ங்களில் தேடாதீர்கள் உங்கள் நெருங்கிய நண்பர் FACEBOOKஇல் இல்லை அவர்கள் உங்கள் வீட்டிலேயே இருக்கின்றனர். வெளியில் தேடுவதற்கு எவ்வித தேவையூம் உங்களுக்கில்லை."

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &