BREAKING NEWS

Sep 18, 2012

மாணவர்களின் நலன் கருதி உ/த விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைக்கு அழைப்பு - கல்வி அமைச்சர்


உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களது எதிர்காலம் பற்றி எண்ணி வேலை நிறுத்தப் போராட்டத்தை கருத்திற் கொள்ளாது விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு கலந்துகொள்ளுமாறு கல்வி அமைச்சிர் பந்துல குணவர்தன பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று கல்வியமைச்சின் கேற்போர்கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 277,096 மாணவர்கள் தோற்றியிருந்தனர் இவர்களது எதிர்காலம் முழுவதும் பரீட்சை பெறுபேற்றிலே யே தங்கியூள்ளது. எனவே உங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளை கருத்திற்கொள்ளாது விடைத்தாள் திருத்தும் பணியில் கலந்துகொள்ளுமாறு நான் உங்களை அன்பாய் அழைக்கின்றேன். நீங்கள் எமது நாட்டின் எதிர்கால சந்நததியினரை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் உங்கள் மீது எமக்கு மிகுந்த மரியாதையூண்டு எனத் தெரிவித்தார்.

மேலும், இது சம்பந்தமான கடிதம் இவர்களுக்கு நேற்று 17ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்டதாகவூம் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் பொலிஸ் பாதுகாப்புடன் கவனமாக பேணப்பட்டு வருவதாகவூம் அது சம்பந்தமாக மாணவர்கள் வீணாக பயப்படத் தேவையில்லை எனவூம் இவர் தெரிவித்தார்.

அத்துடன் , இம்மாத இறுதிக்குள் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரவூள்ளதாகவூம் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &