BREAKING NEWS

Sep 8, 2012

தலைவர் கிண்ண கால்பந்தாட்டப்போட்டிகள் நாளை ஆரம்பம்


குருநாகல் மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளன தலைவர் கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நாளை முதல் குருநாகல் மாளிகாப்பிட்டிய மைதானத்தில் ஆரம்பமாகின்றன.

குருநாகல் மாவட்டத்திலுள்ள முதல் நிலை 9 கால்பந்தாட்ட அணிகள் பங்குபெறும் இப்போட்டித் தொடர் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீங் அடிப்படையிலே இடம்பெறவிருக்கின்றன. குழு ஏ யில் 5 அணிகளும் குழு பீ யில் 4 அணிகளுமாக பிரிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்விரு குழுக்களிலிருந்தும் தலா இரு அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவூசெய்யப்படவிருக்கின்றன.

நாளை குழு ஏ யின் முதல் போட்டி பிற்பகல் 03.45 முதல் மாளிகாப்பிட்டிய மைதானத்தில் பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் பெலிகன்ஸ் கால்பந்தாட்டக் கழகம் என்பவற்றுக்கிடையில் இடம்பெறவிருக்கின்றது.

 பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் குருநாகல் மாவட்டத்தின் தற்போதைய ஜாம்பவானாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கதுடன், பெலிக்னஸ் விளையாட்டுக் கழகமானது இலங்கையின் அதிசிறந்த 20 கழகங்களுக்குள் இருக்கும், வெளிநாட்டு வீரர்கள் விளையாடும் அணியென்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும், இறுதியாக இலவன் ஸ்டார்ஸ் மற்றும் பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் மோதிய போட்டியில் 5-1 எனும் அடிப்படையில் இலவன் ஸ்டார்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எது எவ்வாறிருப்பினும், ஏ குழுவைப் பொறுத்தவரையில் குருநாகல் மாவட்டத்தின் அதிசிறந்த 4 நான்கும் அணிகளையூம் கொண்டதாக அமைந்திருக்கின்றமை மிகப்பெரும் அநியாயத்துக்குரிய விடயமாகும். ஏ குழுவிலே தற்போதைய சம்பியனான பறகஹதெனிய இலவன் ஸ்டார்ஸ், தற்போதைய ரன்னர்ஸ்அப் யன்ங் ஸ்பீட், பெலிக்கன்ஸ், ஜுட்சன்ஸ் மற்றும் ங்ரீன் பார்க் ஆகிய அணிகள் இடம்பெற்றிருக்கின்றமை அனேகமான கால்பந்தாட்ட விமர்சகர்களது ஆட்சேபனைக்குள்ளான விடயமாகும்.

இதன் மூலம் தலைசிறந்த நான்கு அணிகளில் இரண்டு அணிகள் கட்டாயம் லீங் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறும் நிலை உருவாவதுடன் அறையிறுதிப் போட்டிகள்  சில சமயம் மிக இலகுவான போட்டிகளாக அமைவதற்குரிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவூம் தெரிவிக்கப்படுகின்றன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &