BREAKING NEWS

Sep 8, 2012

பறகஹதெனிய தபால் அலுவலகத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகள் ஆரம்பம்


பறகஹதெனிய கிராமத்தின் பிரதான குறைபாடாகவிருந்த தபால் அலுவலகத்துக்கென்ற சொந்த இடமொன்று இல்லாமைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுத்து மர்ஹும் அல்ஹாஜ் எம் எஸ் எம் நிஸாம் (முன்னால் பிரதிப் பொலிஸ் மா அதிபர்) அவர்கள் தனது சொந்தக் காணியிலிருந்து 5 பேர்ச் நிலத்தை இலவசமாக அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுத்ததன் விளைவாக பறகஹதெனிய பாடசாலை வீதியில் உபதபாலகத்துக்கான கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

அதன் இரண்டாவது கட்டமாக எஞ்சிய பகுதியின் நிர்மாணப்பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்ப கட்ட நிர்மாணப் பணிகளுக்காக சுமார் 17 இலட்சம் செலவூசெய்யப்பட்டதுடன் இம்முறை இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்காக ரூபா 10 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக மாவத்தகம பிரதேச சபையின் செயலாளர் முன்ஸீர் ராபி கருத்துத் தெரிவிக்கையில் "மர்ஹும் அல்ஹாஜ் நிஸாம் மற்றும் அவரது மனைவி ஆகியோரது நன்கொடைனால் உருவானதே இந்த தபால் அலுவலகம். 2009ஆம் ஆண்டு வரைக்கும் தபால் அலுவலகத்துக்கென சொந்தமாக இடம் இல்லாதிருந்தமையினால் கூலிகொடுக்கப்பட்டு பல்வேறு இடங்களில் இவ்வூபதபால் அலுவலகம் நடாத்தப்பட்டமை அனைவருக்கும் தெரிந்த விடயம்.

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது சிந்தனையின் படி
"ஜாதிக சவிய - கமநெகும" வேலைத்திட்டத்துக்கு அமைவாக கடந்த 2010 ஜனவரி 09 ஆமதிகதி இதன் முதல் கட்டுமானப்பணிகள் நிறைவூபெற்று திறந்து வைக்கப்பட்டது.



இதன் இரண்டாவது கட்டமாக ரூபா 10 இலட்சம் செலவில் எஞ்சிய நிர்மாணப்பணிகளை எமக்கு கடந்த வாரம் ஆரம்பிக்கக்கூடியதாக இருந்தது. முக்கியமான விடயம் என்னவெனில் இத்துடன், இது உபதபால் அலுவலகமன்றி தபால் அலுவலகமாக தரமுயர்த்தப்பட்டிருக்கின்றமை அனைவருக்கும் இன்றியமையாத ஒரு விடயமாகும்." என குறிப்பிட்டார்.

எனவே இதன் நிரமாணப்பணிகள் நிறைவூற்றதும் புதிய பறகஹதெனிய தபால் அலுவலகம் தரமுயர்த்தப்பட்ட செய்தி உத்தியோகபூர்வமாக அறியக்கிடைக்கும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &