ஊனமுற்றோருக்கான ஒலிம்பிக் (பராலொலிம்பிக்) போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பிரதீப் சஞ்சய - வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ரீ46 பிரிவின் கீழ் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியிலேயே 3ஆம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை இலங்கைக்காக வென்று கொடுத்துள்ளார்.இது பராலிம்பிக் போட்டிகளில் இலங்கை பெறும் முதலாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரீ46 பிரிவு என்பது ஒரு கையில் முழங்கைக்குக் கீழ் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகளைக் குறிக்கும்.