இருந்தாலும் சுமார் மூன்று மாதகாலமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் பணிப்பகிஷ்கரிப்புக்குரிய தீர்வூ கிட்டிராத நிலையில் அவர்களது பகிஷ்கரிப்பு தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் நாளை பல்கலைக்கழகங்கள் திறக்கப்படுவதன் மூலம் மாணவர்கள் மீண்டும் பல்கலைக்கழக விடுதிகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பும் பல்பலைக்கழத்தினுள் செல்லும் வாய்ப்பும் கிடைக்கப்பெறுகின்றது.
எது எவ்வாறிருப்பினும் பல்கலைக்கழக மாணவர்களின் இருட் காலத்தின் முடிவூக்கு இன்னும் எவ்வித நிரந்தரத் தீர்வூம் காணப்படாமலிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.