BREAKING NEWS

Sep 4, 2012

தனியார் வகுப்பு கழிவறையிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

கண்டியிலுள்ள தனியார் வகுப்பு ஒன்றின் கழிவறையிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் மகிந்த சோமதிலகவின் மகனான சுதிர மகிந்ததிலக என்ற 18 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்திற்கு அருகில் சிறிதளவு மண்ணெண்ணையும் ஒரு தீப்பெட்டியும் காணப்பட்டுள்ளது.
எனவே இது தற்கொலையா? அல்லது கொலையா? எனத் தெரியவில்லை. 

சம்பவம் தொடர்பில் கண்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &